தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்ட குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
வவுனியா - புளியங்குளம் மதியாமடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலமானது இன்று (31.05.2023) காலை மீட்கப்பட்டுள்ளது.
புளியங்குளம் - மதியாமடு பகுதியில் வசித்து வந்த 38 வயதுடைய கெ.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை
குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம் (30.05.2023) இரவு தனது தோட்டத்திற்கு சென்று தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இதனை அவதானித்த ஒருவர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாமென ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
