ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத ஒருவர் உள்ளிட்ட 3 கொவிட் மரணங்கள் பதிவு
ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத ஒருவர் உள்ளிட்ட மூன்று கொவிட் மரணங்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்வடைந்துள்ளது.
1. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 93 வயதான பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 30ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பல்வேறு நோய் நிலைமைகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத 70 முதல் 80 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் மருதானை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் 30ம் திகதி உயிரிழந்துள்ளார்.கொவிட் தொற்றினால் அவர் உயிரிழந்துள்ளார்.
3. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் இன்றைய தினம் ஹோமகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் சிறுநீரக நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
