பல வருடங்களிற்கு பின்பு புனரமைக்கப்படும் புளியம்பொக்கணை சந்தி பாலம்
முல்லைத்தீவு வீதியின் புளியம்பொக்கணை சந்தியிலுள்ள பிரதான பாலமானது பல வருடங்களின் பின்பு புனரமைக்கப்பட உள்ளது.
2019ஆம் ஆண்டு குறித்த பாலம் புனரமைப்பு பணிகளுக்காக ஏற்கனவே இருந்த பழைய பாலத்தை உடைத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாகவும் நாட்டின் பொருளாதார நிலை காரணமாக நிதியின்மை காரணமாகவும் குறித்த புனரமைப்பு கைவிடப்பட்டிருந்தது.
புனரமைப்பு பணிகள்
தொடர்ந்து குறித்த பாலத்தில் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டதுடன் இரண்டு இளைஞர்கள் கூட விபத்தில் உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில், கிராம அமைப்புக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து புனரமைப்பு பணி முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



