முல்லைத்தீவு சொக்கன் குளத்தின் நீர்ப்பாசனத் தொகுதி புனரமைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் அனிஞ்சியன் குளம் கிராம கமக்கார அமைப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க றகமா நிறுவனத்தினரால் சொக்கன் குளத்தின் நீர்ப்பாசனத் தொகுதி நேற்று(18.07.2025) புனரமைக்கப்பட்டுள்ளது.
துணுக்காய் பிரதேச செயலாளரின் அனுமதியுடன், கிராம சேவகர் மற்றும் கமநலசேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஆலோசனைகளுடன் குறித்த குளத்தின் நீர்ப்பாசனத் தொகுதியின் புனரமைக்கப்பு பணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தச் செயற்திட்டத்திற்காக குறித்த நீர்ப்பாசனத் தொகுதியினை பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ளும் குடும்பங்களின் மனித வலுக்கள் பயன்படுத்தப்பட்டு, அவர்களுக்கான உலருணவு பொருட்கள் றகமா நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நெல் உற்பத்தி
உணவிற்கான வேலைத்திட்டத்தின் கீழ் தேவைப்பாடுடைய 50 குடும்பங்களுக்கே உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
குறித்த பகுதியில் 11 ஏக்கர் நிலப்பரப்பிற்கான நீரினை தடையின்றி வழங்குவதன் ஊடாக நெல் உற்பத்தியினை அதிகரிப்பதனை நோக்காகக் கொண்டு 1100 மீற்றர் நீர்ப்பாசன தொகுதி புனரமைப்பு செய்வதற்காக குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறி்ப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







