தெஹிவளையில் பொலிஸாரின் உத்தரவை மீறி செயற்பட்ட பலர் கைது
தெஹிவளை கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள சோல் பீச் என்ற விருந்தகம், ஏற்கனவே பொலிஸாரால் தகர்க்கப்பட்ட நிலையில், குறித்த இடத்தில் மீண்டும் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்த பலர் கைது செய்யபபட்டுள்ளனர்.
சட்டவிரோத கட்டுமானத்தை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் சமர்பித்த வரிப்பத்திரம் போலியானது என கல்கிசை பிரிவு விசேட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் சந்தேகநபரின் நிலம்
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களை நீதிமன்றம், மே 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க நில அளவை திணைக்களத்தின் அளவையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய குறித்த காணி அரசுக்கு சொந்தமான காணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தற்போது வெளிநாட்டில் இருந்து இயங்கி வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான சிரான் பாசிக் என்பவருக்கு இந்த கட்டிடம் சொந்தமானது என சந்தேகிக்கப்பட்டு. கடந்த ஜனவரி மாதம் அது பொலிஸாரால் தகர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri