காத்தான்குடியின் சில பகுதிகளின் தனிப்படுத்தலை நீக்க பரிந்துரை
காத்தான்குடியின் நிலைமையினை வெளிப்படுத்தி தமக்கு பெரும் உதவி புரிந்த காத்தான்குடி நகரசபையின் தவிசாளருக்கு நன்றி தெரிவிப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தின் ஒரு சில வீதிகள் தவிர ஏனைய பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் நிலையினை நீக்குவதற்கான பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 8503 பேருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்பட்டுள்ளது. காத்தான்குடிக்கு தனிமைப்படுத்தல் முக்கியம் என்பதை அடையாளப்படுத்துவதற்கு காத்தான்குடி நகரசபை தவிசாளர் முகப்புத்தகம் ஊடாக வழங்கிய தகவலே பெரும் உதவியாக அமைந்தது.
அதன் காரணமாகவே நாங்கள் விரைவாக சோதனைகளை முன்னெடுத்து அப்பகுதிகளை தனிமைப்படுத்தியிருந்தோம்.
இதன்காரணமாக சுகாதார துறையினருக்கு உதவியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கின்றோம். காத்தான்குடியில் தொடர்ச்சியாக கோவிட் தொற்று தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் தாக்கமானது குறைந்துள்ள நிலையில் ஒரு சில வீதிகளை தவிர ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையினை நீக்குவதற்கான பரிந்துரைகள் தேசிய கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பான அறிவிப்பு தகவல் திணைக்களம் ஊடாக விடுக்கப்படும். தனிமைப்படுத்தல் நிலையினை நீக்குவதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் ஆபத்தின் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.
எனவே மக்கள் அவதானமாக இருப்பதுடன் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan