கிளிநொச்சி - பளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவின் ஒரு அங்கமான பொலிஸ் நிலையங்களை 5எஸ் (Five s)திட்டத்திற்கு கொண்டுவரும் செயற்பாடு நாடுபூராவும் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில், அதன் ஒரு அங்கமாக வடமாகாணத்தில் முதலாவது பொலிஸ் நிலையமாக கிளிநொச்சி - பளை பொலிஸ் நிலையம் 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக இன்று திறந்து வைக்கப்பட்டது.
பளை பொலிஸ் நிலையம்
குறித்த பொலிஸ் நிலையத்தினை வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சி.ஏ.தனபால திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சமந்த டீசில்வா, கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் செனவரத்ன, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பளை பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri