ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டங்களுக்கு அங்கிகாரம்!
2022ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் விரிவான வேலைத்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில், சிறிகொத்த, பிடகோட்டயில் இடம்பெற்றது.
எதிர்காலத்தில் கட்சியிலும் சிறிகொத்த தலைமையகத்திலும் பாரிய மாற்றமொன்று முழுமையான தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஏற்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் இவ்வருடம் ஏற்பாடு செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு அறிமுகப்படுத்த முயற்சிக்கும் புதிய முகங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் இருவரும் உடன்படவில்லை என செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
