மாத்தளை லயன் குடியிருப்புக்களை புனரமைக்க நடவடிக்கை : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி
மாத்தளை (Matale), ரத்தோட்டை, பிட்டகந்த தோட்டத்தில் லயன் வீடுகளில் வாழும் மக்களின் கூரைகளை புனரமைக்கும் பணிகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார தென்னகோன் ( Pramitha Tennakoon) தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளில் வாழும் மக்களின் மிக நீண்ட கால தேவையாக கருதப்படும் மேற்படி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து தருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்பு திணைக்களம்
இதேவேளை, பின் தங்கிய மற்றும் தோட்டப்புறங்களில் வாழும் மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய இந்த வேலைத்திட்டத்தை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக இரண்டு மாத காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் எம். சிவஞானம் உட்பட ரத்தோட்டை மற்றும் அம்பன் கோறளை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
