இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள்: சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிடுவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பல காரணங்கள் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் மொத்த வருமானம் மூலம் செலவினத் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கத்தினால் இயலாமையே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
வரி வருமானம்
2021 ஆம் ஆண்டில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், வரி வருமானம் 7 வீதமும் 3 பத்தில் 3 ஆகவும் இருந்தது.

உலக நாடுகளுக்கிடையில் மிகக் குறைந்த நிதி வருமானத்தை ஈட்டிய சந்தர்ப்பம் இது என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் ஏற்படும் இடைவெளியை நிரப்ப சர்வதேச கடன் வழங்குநர்கள் நிதி வசதிகளை வழங்க மாட்டார்கள் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகின்றது.
பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகம், சிரேஷ்ட பிரதம பீட்டர் ப்ரூவர் மற்றும் அலுவலகத் தலைவர் மசாஹிரோ நோசாக்கி ஆகியோர் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை இவற்றை வெளிப்படுத்தியுள்ளது.
அமுல்படுத்தப்பட்ட வரி அதிகரிப்புக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், கடன் கொடுனரின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கு இலங்கையில் வரி சீர்திருத்தங்கள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
May you like this Video
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri