கச்சைத்தீவினை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுக்க இதுவே காரணம்! வழக்கறிஞர் விளக்கம் (Video)
எம்.ஜீ.ஆர், விடுதலைப்புலிகளின் தலைவரை பார்த்து உன்னை எவ்வளோ நம்புகின்றேன். நீ இப்படி பண்ணலாமா என்று கேட்டார் என முன்னாள் பொலிஸ் அதிகாரியும், வழக்கறிஞருமான வரதராஜன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆரம்ப காலத்தில் பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்தவரை இந்திரா காந்தி இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளார்.
பண்டாரநாயக்கவும், இந்திரா காந்தியும் நெருங்கிய நண்பர்கள். ஆகையால் தான் அவர் கச்சைத்தீவினை இலங்கைக்கு தாரைவாத்து கொடுத்தார். அப்போது தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி தனது எதிர்ப்பினை தெரிவித்து கடிதமொன்றை எழுதினார்.
ஆனால் பெரிய எந்தவொரு எதிர்ப்பினையும் அவர் காட்டவில்லை. மத்திய அரசாங்கத்தினை பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை.அதன் பிறகு பண்டாரநாயக்காவின் ஆட்சி கவிழ்ந்தது. அவரின் ஆட்சிக்கு பிறகு ஜெயவர்த்தன ஆட்சியினை பிடித்தார்.
ஜெயவர்த்தனவின் ஆட்சியின் போது இந்தியாவுடனான உறவில் மிக பெரிய மாற்றம் தெரிந்தது. பண்டாரநாயக்க அளவிற்கு அவர் சுமூகமாக இருக்கவில்லை. பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகளின் பக்கம் அவர் சாய தொடங்கிவிட்டார்.
அப்போது தான் இந்திராகாந்தி, இந்தியாவிற்கு எதிரான கொள்கைகளை இலங்கை கடைப்பிடிப்பதாக கூறி இலங்கையை பயமுறுத்துவதற்காக ரெலோ அமைப்பை தேர்ந்தெடுத்தார்கள்.
இந்தியாவின் RAW அமைப்பினை அழைத்து ரெலோவிற்கு பயிற்சியழிக்குமாறு இந்திராகாந்தி கூறினார் என தெரிவித்துள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
