தென்கொரிய விமான விபத்து! நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி காரணம்
பறவை ஒன்றுடன் மோதியதால்(Bird Strike) தென்கொரிய விமானத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது உறவினருக்கு அனுப்பிய குறுந்தகவலில், விமானத்தின் இறக்கையில் பறவையொன்று சிக்கியிருப்பதாகவும் அதனால் தரையிறங்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டே தற்போது விபத்துக்கு காரணமாக பறவை மோதல் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பல்வேறு காரணங்கள்
பறவை தாக்குதல் அல்லது பறவை மோதல் என்பது விமானத்தில் பொதுவாக நடக்கக் கூடிய ஒரு விடயமாகும்.
2022இல் பிரித்தானியாவில் 1,400க்கும் மேற்பட்ட பறவை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இவற்றுள் 100 வரையிலான தாக்குதல்களே விமானத்திற்கு சேதம் விளைவித்துள்ளன.
2009ஆம் ஆண்டு ஏர்பஸ் விமானம் நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, வாத்துக்களின் கூட்டத்துடன் மோதியதில் விபத்துக்குள்ளானது. எனினும், இதன்போது விமானத்தில் இருந்த 159 பயணிகளும் உயிர் தப்பினர்.
இந்நிலையில், சீரற்ற கலாநிலை போன்ற பல்வேறு காரணங்களாலும் தென்கொரியாவில் விமான விபத்து ஏற்பட்டிருக்க கூடும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |