தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயார் : சி.வி.கே.சிவஞானம்
இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்த வரையில் முதன்மைக் கட்சியாக இருந்தாலும் கூட தமிழ் தேசிய கட்சிகளை இணைத்துக்கொண்டு பயணிக்கவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டும்.அந்த பொறுப்பினை நாங்கள் இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பித்தோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அமரர்.சீ.மூ.இராசமாணிக்கத்தின் 113ஆவது ஜனன தின நிகழ்வு களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கு விடிவு தராது
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த உள்ளூராட்சிமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களின்போது நின்ற ஜனநாயக தேசிய கூட்டணியுடனான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றோம்.
அதில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனித்துவங்களைப் பேணிக்கொண்டு செயற்படுவது என்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.

மீண்டும் எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று நானும் பொதுச்செயலாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.அந்த அழைப்பினை தொடர்ந்து ஜனநாயக தேசிய கூட்டணியை பொறுத்த வரையில் அவர்கள் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை.
பரந்த மனப்பான்மையுடன் எங்களுடன் பேசினார்கள். அவ்வாறானதொரு நிபந்தனையற்ற இணைவுகள் ஏனையவர்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
சிங்கள தேசிய கட்சிகளின் தலைமைகளுக்கு எந்த கட்சியும் எங்களுக்கு விடிவு தராது. அவர்களது கட்சிக்குள் எங்களது மக்களும் ஊடுறுவி நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு சிங்கள தலைமைகளுக்கு மேலாக செல்லமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், கோடீஸ்வரன், வைத்தியர் சத்தியலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri