ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயார்! - சஜித் தரப்பு அறிவிப்பு
எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இன்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் மட்டுமே, எமது கட்சி இணைந்து செயற்படும்” என கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சில முக்கிய பிரச்சினைகள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்த பிரச்சினையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.