இலங்கையை ஒரு மாதத்தில் மீட்க தயார் - நிபந்தனை விதித்த சுவிஸ் புலம்பெயர் அமைப்பு
இலங்கைக்கு தேவையான மாதாந்தம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கத் தயார் என இலங்கை தேசப்பற்றுள்ள புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தேசிய அரசாங்கம் ஊடாக பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் நாட்டுக்குத் தேவையான பணம் வழங்கப்படும் என சுவிட்சர்லாந்தின் லூசர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர் கலாநிதி நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது? சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் இருந்து மீள்வது எப்படி? புதிய தேசியமாக நாடு எப்படி மீண்டு வரும் என்பது தொடர்பில் அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி இணைந்து எங்களுக்கு ஒரு வரைபடத்தை காண்பித்தால் இலங்கைக்கு உதவுவோம்.
எந்தெந்த அர்ப்பணிப்புகளை செய்கின்றோம் என்பது தொடர்பிலும் அரசாங்கம் மற்றும் எதிர்கட்சியினர் இணைந்து அனைத்துக் கட்சி தேசிய பேரவையின் ஊடாக பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் ஒரு மாதத்திற்குள் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க நாங்கள் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
