சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டை திறக்க தயார்! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
சுகாதார வழிகாட்டுதல்களின்படி, எதிர்வரும் 21ம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டை திறக்க அனைத்தும் தயாராக உள்ளதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோய் நாட்டிற்கும், சமூகத்திற்கும், வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரவாமல் தடுக்க சாத்தியமான மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 26 ஆம் திகதி தொடங்கப்பட்ட ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ் இதுவரை 1,500 உக்ரேனிய சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், இதன் மூலம் நாட்டிற்கு 420 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
ஒழுங்குமுறை திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்யவும், சுகாதார வழிகாட்டுதல்களின்படி சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக சுமார் 180 ஹோட்டல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஹோட்டல்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சான்றிதழ் பெற்றவை.
சுற்றுலா மேம்பாட்டு ஆணையம், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தொடர்புடைய சான்றிதழை இலவசமாக வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.
21 ஆம் திகதிக்குப் பிறகு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா குமிழியாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிற்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு, அவர்கள் பி.சி.ஆர் சோதனை செய்ய வேண்டும்.
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஹோட்டலில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் நாட்டிற்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் அனைத்து பி.சி.ஆர் முடிவுகள் கிடைத்துவிடும்.
முடிவு வரும் வரை அவர்கள் அந்தந்த ஹோட்டல்களில் தங்க வேண்டும். 5-7 நாட்களில், இந்த சுற்றுலாப் பயணிகள் மற்றொரு பி.சி.ஆர் சோதனை செய்யவேண்டும்.
பின்னர் அவை சோதிக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்ட 14 சுற்றுலா தலங்களுக்கு அவர்கள் செல்ல முடியும்” என அமைச்சர் கூறியுள்ளார்.
டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக் Cineulagam