போருக்கு தயாராக இருக்கின்றோம்: போலந்து அதிரடி அறிவிப்பு
போர் அச்சுறுத்தலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை போலந்து இராணுவம் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய போர் சூழலில் போலந்து மீதான போர் அச்சுறுத்தல் தொடர்பில் போலந்து பாதுகாப்பு மந்திரி விளாடிசா கோனேக் காமிஸ் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் பதிலளிக்கையில்,
போர் அச்சுறுத்தல்
போர் அச்சுறுத்தலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை போலந்து இராணுவம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. அனைத்து வகையான சூழ்நிலைகளையும் நான் எதிர்பார்க்கிறேன். அதில் மோசமானவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.
இன்று நாம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு பாதுகாப்பு மந்திரியின் பணி அதுதான். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கின்றோம். இதனை வெறும் பேச்சுக்காக நான் சொல்லவில்லை.
போலந்து இராணுவம் போர் அச்சுறுத்தலுக்குத் தயாராகும் உறுதியான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளது.
பெரியளவிலான ஆயுதக்கொள்முதல் மிகவும் முக்கியமானது என்றாலும், ஒவ்வொரு இராணுவ வீரருக்கான தனிப்பட்ட உபகரணங்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
