வட மாகாண அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய தயார்: ருட்ஜென்ஸ் உறுதி
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்தின் இலங்கைக்கான துணைத்தூதுவர் ருட்ஜென்ஸ் உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன் நேற்று (08.02.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
அபிவிருத்தி திட்டங்கள்
இதன் போது வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் விடயங்களை கேட்டறிந்த நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் குடாநாட்டிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri