கொழும்பில் வீதிக்கிறங்கிய பல்கலை மாணவர்கள்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் மருத்துவபீட பேராசிரியர் வெற்றிட பிரச்சினையை நிவர்த்தி செய்யக்கோரி கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - மொரிஸ் வீதியில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சபைக்கு முன்பாக இன்று(09.02.2024) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களால் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்திற்கான இறுதியாண்டு கற்கைநெறிகள் அனைத்தும் நடைபெறுவதில்லை எனவும், அனுபவரீதியான கற்கைநெறிக்கு வைத்தியசாலைகளுக்கு தாம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பேராசிரியர் வெற்றிடம்
அத்தோடு தனியார் பல்கலைக்கழகங்களில், மருத்துவபீடத்திற்கான பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீட பேராசிரியர் நியமிக்கப்படாமை தொடர்பில் கல்வி அமைச்சிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் உடனடியாக மருத்துவபீடத்திற்கான பேராசியர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் எனவும், அனுபவரீதியான கற்கைநெறிக்கு வைத்தியசாலைக்கு செல்வதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுவதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam