அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமடையும் பொதுமக்களின் அதிருப்தி! கடுமையாக சாடிய எதிர்கட்சி தலைவர் (PHOTOS)

Government Jaffna Samagi Jana Balawegaya Sajid Premadasa
By Independent Writer Jan 09, 2022 08:43 PM GMT
Report

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென அக்கட்சித் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமன சஜித் பிரேமதாச (Sajid Premadasa) தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொதுக்கொள்கையுடன் செயற்பட எந்த கட்சியும் முன்வரலாம்.மேலும் தற்போதைய ஜனாதிபதி போராட்ட அரசியலையே மேற்கொண்டு வருகிறார்.

நான் பெளத்தனாகவுள்ளேன். ஆனால் மத வேறுபாடு, இனவேறுபாடு காட்டாமல் எல்லோரையும் இலங்கையர்களாகவே பார்க்கவேண்டும். இதனையே ஜனாதிபதியும் செய்யவேண்டும்.

நமது ஆட்சியில் வீட்டுத் திட்டங்களை வழங்கியிருந்தோம். ஆனாலும் கூட தற்போது வந்த அரசாங்கம் அந்த வீட்டு திட்டங்களுக்கான நிதிகளை வழங்காமல் மக்களிடம் விளையாட்டுக்களைக் காட்டி வருகின்றது.

வடக்கு, கிழக்கு சார்ந்த பகுதிகளில் சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக நாங்கள் வந்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று நாம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களை சந்திக்கின்றோம். இது மிகவும் மகிழ்ச்சியானது. ஆனால் தற்போது நாட்டில் ஊடகத்துறைக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றது.

ஆளும் தரப்பின் அமைச்சர்கள் தற்போது நீக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வெளியே விடப்படும் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாற்று சக்தியாக உருவாகுவதற்கு சாத்தியமில்லை.

மைத்திரிபால சிறிசேன தற்போது வரை பொதுஜன பெரமுனவில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற நபர். அவ்வாறான ஒருவர் எதிர்த்தரப்பின் பொது வேட்பாளராக வருவதற்கு சாத்தியமில்லை.

2023 நடுப்பகுதிக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும். ஆயினும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் இல்லாத பொதுவேட்பாளரை நிறுத்தும் ஆதரிக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை.

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது என தெரிவித்துள்ளார்.   


GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US