வவுனியாவை அடைந்தது கோட்டா கோ கம துவிச்சக்கர வண்டி பயணம் (PHOTOS)
கோட்டா கோ கம போட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னியில் இருந்து செல்லும் துவிச்சக்கர வண்டி பயணம் இன்று மாலை வவுனியாவை வந்தடைந்துள்ளது.
காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக 32 வயதுடைய இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற நபர் விஸ்வமடுவில் இருந்து காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இன்று (20.05) மாலை வவுனியாவை அடைந்தது. வவுனியாவை அடைந்த அவர், காலை அனுராதபுரம் நோக்கி தனது துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நாட்டு மக்களின் நலன் கருதியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், பொருளாதார நெருக்கடியை தீர்க்கக் கோரியும் குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri