இரு பிரதேச சபைகளில் மீண்டும் வரவு செலவுத்திட்டம் - விடுக்கப்பட்ட பணிப்புரை
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிரதேச சபைகளில் மீண்டும் வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பிரதேசசபைகளின் சட்டத்தின்படி பெரும்பான்மை வரவு செலவு திட்டத்திற்கு காட்டப்படவேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டுசபைகளுக்கான வரவு செலவுத்திட்டம் மீண்டும் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
மீண்டும் வரவு செலவு திட்டம்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபை ஆகிய இரு சபைகளுக்கான வரவு செலவு திட்டம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இரு சபைகளுக்குமான விசேட கூட்டங்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு கூட்டுவதற்கான அழைப்புகள் சபைகளில் செயலாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சபைகளும் கடந்த வாரம் தமது வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றியதாக அறிவித்திருந்த நிலையில் இரண்டு சபைகளும் தமது பெரும்பான்மையினை காட்டாத காரணத்தினால் மீண்டும் வரவு செலவு திட்டத்திற்கான விசேட கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri