மீண்டும் தலைவராக ரணில் நியமனம்! கட்சி உறுப்பினர்கள் சாடல்
ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் கட்சித் தலைவராக நியமிக்கும் முடிவை அந்த கட்சியின் உறுப்பினரான காமினி ஜயவிக்ரம பெரேரா விமர்சித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ரணிலின் நியமனம் அரசாங்கத்தை பலப்படுத்தும் என்று பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
அவரைப் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. ரணில் கட்சிக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை நாம் காணலாம்.
இந்த நியமனத்தால் அரசாங்கம் பயனடைகிறது. ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் வருவது மிகவும் கடினம் என்றும், ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றியுள்ளவர்களுக்கு கட்சியின் மீது அக்கறை இல்லை என்றும் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூடிய நிலையில், கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித்த ரங்கே பண்டாரவும், உப தலைவராக அகில விராஜ் கரியவாசமும் நியமிக்கப்பட்டனர்.
ருவான் விஜேவர்தன தொடர்ந்து துணைத் தலைவராக செயல்படுவார். தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கட்சியின் சிரேஷ்ட துணை தவிசாளர்ளாக டி.எம். சுவாமிநாதன் மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வ்வாறாயினும், கட்சியின் தலைமை பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து கட்சியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.