லக்னோவை வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி!
ரோயல் சேலன்ஜர்ஸ் பெங்களுரு மற்றும் லக்னோ அணிகளுகிடையிலான(LSG) இறுதி ஐபிஎல் போட்டியில் ரோயல் சேலன்ஜர்ஸ் பெங்களுரு அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இதன் மூலம் தகுதிகாண் சுற்று 1ற்கு ரோயல் சேலன்ஜர்ஸ் பெங்களுரு(RCB) அணி தகுதிப்பெற்றுள்ளது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ரோயல் சேலன்ஜர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க வீரர் பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 37 பந்தில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆர்சிபி அணி
இதையடுத்து, 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.விராட் கோலி அதிரடியாக ஆடி 54 ஓட்டங்களில் வெளியேறினார்.
4 விக்கெட்டுக்கு 123 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அப்போது 5வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால்-ஜித்தேஷ் குமார் ஜோடி இணைந்து அதிரடியாக ஆடியது.
கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. ஜித்தேஷ் சர்மா அரை சதம் கடந்தார். இறுதியில், ஆர்.சி.பி. அணி 18.4 ஓவரில் 230 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து தகுதிகாண் 1 சுற்றுக்கு முன்னேறியது.
ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ஓட்டங்களும், மயங்க் அகர்வால் 41 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam
