தமிழரசுக் கட்சி பிரச்சினையை நிர்வாகமே தீர்க்கும்! விமர்சனங்களுக்கு ரவிகரன் எம்.பி பதிலடி
தமிழ் மக்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்படுவதால் தமிழரசுக் கட்சி மீதான நம்பிக்கை குறைந்து விட்டதாகவும், கட்சிக்குள் எழும் பிரச்சினைகளை நிர்வாகம் பார்த்துக் கொள்ளும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சி விவகாரம்
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழரசுக் கட்சி எங்களுடைய குடும்பம் போன்றது. அதற்குள் உள்ள பிரச்சினைகளை வெளியில் கூற வேண்டிய அவசியம் இல்லை. கட்சிக்குள் எழும் பிரச்சினைகளை கட்சியின் நிர்வாகமே பார்த்துக் கொள்ளும். தமிழ் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பிற கட்சியினரின் விமர்சனங்கள் போன்ற காரணங்களால் தமிழரசுக் கட்சி மீதான நம்பிக்கை குறைந்து விட்டது.

அதேபோன்று, கட்சிக்குள் பிரச்சினைகள் அதிகரித்தால் அவற்றை தமிழ் தலைமைகள் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “கிவுல் ஓயா திட்டம் என்ற பெயரிலேயே இனவாதம் உள்ளது. உதாரணமாக, சுமார் 1982ஆம் ஆண்டு ஒதியமலைப் படுகொலைகள் நடைபெற்றன. அதன் பின்னரே மக்கள் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கினர். ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த நேர்காணலில் தமிழ் மக்கள் சார்பில் பல முக்கிய விடயங்கள் குறித்து ரவிகரன் எம்.பி விளக்கமளித்துள்ளார். அவை தொடர்பான முழு தகவல்களை காணொளியில் காணலாம்.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri