ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2 ஆயிரம் பேர் மரணம்

Sri Lanka Parliament Sri Lankan Peoples Department of Pensions
By Sajithra Mar 21, 2025 02:01 PM GMT
Report

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார். 

நாடாளுமன்றில் இன்று (21.03 2025) இடம்பெற்ற நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் மீதான வரவு - செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது, இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ரவிகரன் வலியுறுத்தினார். 

இரவு முழுவதும் தேசபந்து தென்னகோனின் பரிதாப நிலை: நீதிமன்றத்தை அதிர வைத்த சட்டத்தரணி

இரவு முழுவதும் தேசபந்து தென்னகோனின் பரிதாப நிலை: நீதிமன்றத்தை அதிர வைத்த சட்டத்தரணி

கோட்டாபய ஆட்சிக்காலம் 

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், "கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை ஓய்வு பெற்றவர்களுக்கு 2020.01.01இல் வழங்குவதற்குரிய ஓய்வூதியமானது நாட்டின் நிலமை காரணமாக கோட்டாபய அமைச்சரவையினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2 ஆயிரம் பேர் மரணம் | Ravikaran Mp Talked About 2000 People S Pensions

இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி சார்பான ஓய்வூதியர் சங்கத்தினர் மேன்முறையீட்டு நீதிமன்தில் வழக்கு தாக்கல் செய்து போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அப்போது அவ்வாறு போராடிய தேசிய மக்கள் சக்தி ஆதரவு தொழில் சங்கங்கள் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என நம்பிக்கையூட்டி வந்தனர்.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை ஓய்வுபெற்ற பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு - செலவுத்திட்டத்தில் இதற்கு தீர்வுகிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நீடிக்கும் பதற்றம்! களத்திற்கு விரைந்த நோயாளர் காவு வண்டி

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நீடிக்கும் பதற்றம்! களத்திற்கு விரைந்த நோயாளர் காவு வண்டி

வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடு 

அதாவது 2020ஆம் கிடைக்க வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவு 2025ஆம் ஆண்டுவரை, ஐந்தாண்டுகளாக பெறமுடியாது காத்திருந்தவர்களுக்கு தற்போது வரவு - செலவுத்திட்டத்தில் அந்தக் கொடுப்பனவு மூன்று கட்டங்களாக 2027வரை வழங்க காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளளது. இக்கொடுப்பனவு பெறவேண்டிய 2000 பேரளவிலான ஓய்வூதியர்கள் இறந்து விட்டனர்.

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2 ஆயிரம் பேர் மரணம் | Ravikaran Mp Talked About 2000 People S Pensions

இந்நிலையில் தற்போதைய அரசும் ஓய்வூதியர் வாழ்வுக்காலம் பற்றி சிந்திக்காது, குறித்த ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்குவதை மேலும் மூன்றாண்டுகளுக்கு பிற்போட்டுள்ளதென கவலையடைகின்றனர்.

எனவே, மக்களுக்கான அரசபணியில் தங்களுடைய கரிசனையைப் பண்பாக செய்து, இன்று ஓய்வில் இருக்கும் சேவையாளர்களை நிம்மதியாக ஓய்வுக் காலத்தை கழிப்பதற்கு உதவி செய்யுங்கள். அந்தக் கொடுப்பனவுகளை கூடியவிரைவில் உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என்றார்.

யாழ். யூடியூபரின் திருகுதாளங்கள்! 50 ஆயிரம் கொடுத்து ஏமாற்று நாடகம்

யாழ். யூடியூபரின் திருகுதாளங்கள்! 50 ஆயிரம் கொடுத்து ஏமாற்று நாடகம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US