பக்தர்களுக்கு வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்.. ரவிகரன் எம்.பி கோரிக்கை
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவ மக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்றும் சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்பட வேண்டும் என்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று(13.02.2026) பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள்
போதுமான வசதிகள் செய்துக் கொடுக்கப்படும்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப் பகுதிக்குள் எடுத்துச் செல்வதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்கதர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அடிப்படை மனித உரிமை பாதுகாப்பு
எனவே, இந்த முறை சிவராத்திரி தினவழிபாடுகளுக்கு அவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது. சைவ மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான சைவமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த முறை தடைகளின்றி சுதந்திரமாக மக்கள் வழிபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படும் என வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்களால் பதில் வழங்கப்பட்டிருந்தது.
மேலும், சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தருகின்ற அடியவர்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வவுனியா வடக்கு பிரதேசசபைத் தவிசாளருக்கு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

