வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை
வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
எனவே சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் வடக்குமாகாண ஆளுநர் ஊடாக வடக்குமாகாணத்தில் நிலவும் சீரற்ற ஆசிரியவளப் பற்றாக்குறையைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரால் இதன்போது பதில் வழங்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
நாடாளுமன்றக் குழு அறையில் 20.02.2026 இன்று இடம்பெற்ற கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வை குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கான அறிவித்தல் கடந்த 2026.02.02 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி ஊடாக வெளியாகியது.
எது எவ்வாறாயினும் வடமாகாணத்தில் காணப்படும் சமச்சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை இதன்போது மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தேன்.
கோரிக்கை
இந்நிலையில் இந்த சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்க விடயத்தில் வடக்குமாகாண கல்வி அமைச்சிலேயே குறைப்பாடுகள் இருப்பதாக இதன்போது தெரிவித்தார்.

எனவே தாம் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி இந்த சமச்சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தைச் சீர்செய் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் தமக்கு பதில் வழங்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri