அதிகரித்துள்ள காட்டு யானைகளின் அத்துமீறல்களுக்கு உடனடித் தீர்வு தேவை; ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காட்டு யானைகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
காட்டுயானைகளின் இத்தகைய அத்துமீறல்களுக்கு வன சீவராசிகள் திணைக்களம் ஊடாக உடனடி தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் (07.10.2026) உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு, கேப்பாப்பிலவு - புலக்குடியிருப்பு பகுதி, புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் தற்போது யானைகளால் வீடுகள், விளைநிலங்கள், விவசாய உற்பத்திப் பொருள்கள், தென்னைகள் என மக்களின் வாழ்விடமும் வாழ்வாதார மூலமும் அழிக்கப்படுகின்றன.
உடனடி தீர்வு
இவ்வாறு தொடரும் அழிவுகளுக்கு உடன் தீர்வு வழங்கவேண்டும். அடுத்த ஆண்டின் ஒதுக்கீட்டில் யானை வேலி இடப்படும் வரை மக்களின் வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் யார் பொறுப்பாவது? ஆண்டுக்கணக்கில் வளர்த்தெடுத்த வான்பயிர்கள் ஓர் இரவில் சாய்க்கப்படுகின்றன.

இவ்வாறான அத்துமீறிய யானை - மனித மோதலுக்கு பிரதேச மட்டத்தில் வன சீவராசிகள் திணைக்களம் ஊடாக உடனடியாக தற்காலிக தீர்வையேனும் வழங்க இவ்வரசு வகை செய்தல் வேண்டும் என்றார்.
வனவளத்திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அரச இயந்திரங்களின் அதிகரித்த நில ஆக்கிரமிப்புக்களால் வயல் நிலத்தை துப்புரவாக்கத் தடை, வயல் நிலத்தை உழுவதற்குத் தடை, வயல் நிலத்துக்கு நீர்பாய்ச்சத் தடை, வாய்க்கால் வெட்டத்தடை என ஒவ்வொரு கட்டத்திலும் வன்னியிலுள்ள விவசாயிகள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri