இனவாதத்தை தூண்டும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை தேவை.. ரவிகரன் எம்.பி கோரிக்கை

Sri Lanka Politician Thurairajah Raviharan
By Shan May 12, 2025 09:38 PM GMT
Report

குருந்தூர்மலை அடிவாரத்தில் தமது பூர்வீக விவசாய நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 10.05.2025 அன்று தமிழ் விவசாயிகள் மூவர் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்ட போது, தொல்லியல் பகுதிக்குள் பண்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பௌத்த பிக்குகள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிசார் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிலங்கள் முழுவதும் தமிழ் மக்களின் நிலங்கள் எனக் குறிப்பிட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தொல்லியல் பகுதிக்குள் குறித்த விவசாயிகளால் பண்படுத்தல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தால் கூட, அது தொடர்பில் தொல்லியல் திணைக்களமே முறைப்பாடு செய்திருக்க வேண்டுமெனவும், இது தொடர்பில் பௌத்த பிக்குகள் முறைப்பாடு செய்வார்களானால் தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளது கூடாரமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல தசாப்தத்தின் பின் இந்திய - பாகிஸ்தான் விமானங்களால் வானில் நிகழ்ந்த பெரும் அதிசயம்

பல தசாப்தத்தின் பின் இந்திய - பாகிஸ்தான் விமானங்களால் வானில் நிகழ்ந்த பெரும் அதிசயம்

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு 

அத்தோடு இனவாதத்தைத் தூண்டுகின்ற வகையில் செயற்படுகின்ற இவ்வாறான பௌத்த பிக்குகளுக்கெதிராக தற்போதைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இனவாதத்தை தூண்டும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை தேவை.. ரவிகரன் எம்.பி கோரிக்கை | Ravigaran Mp Requests To Take Action Against Monks

குருந்தூர்மலைப் பகுதியில் தமிழ் விவசாயிகள் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் பௌத்த பிக்குகளின் அடாவடித்தனமான இனவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் விவசாய நிலங்களில் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 10.05.2025 சனிக்கிழமையன்று மூன்று தமிழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரும் 11.05.2025 அன்று நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் விவசாயக்காணிகள் பூர்வீகமாக தமிழ்மக்கள் விவசாயம் செய்துவந்த காணிகளாகும். இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்தினர் அடாத்தாக எல்லைக்கற்களையிட்டு அபகரித்து வைத்துள்ளனர். குறித்த விவசாய நிலங்களில் கடந்த வருடம்கூட விவசாயிகளால் பயிர் செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்க துணை நிற்கும் கனேடிய தேசம்: சபா குகதாஸ் ஆதரவு

தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்க துணை நிற்கும் கனேடிய தேசம்: சபா குகதாஸ் ஆதரவு

வன்மையான கண்டனங்கள் 

இந்நிலையில் இவ்வருடமும் குறித்த வயற்காணிகளில் விவசாயம் செய்யும் நோக்கில் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்ட விவசாயிகளே இவ்வாறு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று இவ்வாறு கைதுசெய்யப்பட்ட விவசாயிகளைப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடியதுடன், எமது விவசாயிகளது சுதந்திரமான தொழில்செய்யும் உரிமை மறுக்கப்படுவது தொடர்பில் எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்திருந்தேன்.

பௌத்த பிக்குகளின் முறைப்பாட்டிற்கமையவே இவ்வாறு பொலிசாரால் எமது விவசாயிகள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். எமது தமிழ் மக்கள் காலங்காலமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவந்த தமிழ்மக்களது பூர்வீக விவசாய நிலங்களில் தொல்லியல் திணைக்களம் அத்துமீறியே எல்லைக் கற்களையிட்டுள்ளது.

அவ்வாறு தொல்லியல் திணைக்களத்தால் அத்துமீறி இடப்பட்ட பகுதிக்குள் பண்படுத்தல் இடப்பட்டிருந்தால் அதுதொடர்பில் தொல்லியல் திணைக்களமே முறைப்பாடு செய்திருக்க வேண்டும்.

இனவாதத்தை தூண்டும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை தேவை.. ரவிகரன் எம்.பி கோரிக்கை | Ravigaran Mp Requests To Take Action Against Monks

ஆனால், அதுதொடர்பில் பௌத்த பிக்குகளே முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறு பௌத்த பிக்குகள் முறைப்பாடுசெய்து பொலிசார் கைதுசெய்வதெனில், தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளின் கூடாரமா எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இங்கு தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளைப் பறித்ததோடு மாத்திரமின்றி, அக்காணிகளுக்குரிய தமிழ் மக்கள், வாழ்வாதாரத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றபோது பௌத்த பிக்குகளின் முறைப்பாட்டிற்கமைய பொலிசார் கைதுசெய்யப்படுகின்ற அவலமும் அரங்கேறுகின்றது. இந்தவிடயத்தில் உரியவர்கள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறாக இனவாதத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பௌத்த பிக்குகளுக்கெதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏன் எனில் இனவாதத்தை எவரும் வெளிப்படுத்தக் கூடாது, அனைத்து இன மக்களையும் சேர்த்துக்கொண்டு பயணிப்போமென்று கூறிக்கொண்டு ஆட்சிசெய்து கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனமெடுக்க வேண்டும். இவ்வாறான இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தென்னிலங்கையில் வயோதிபத் தம்பதி மர்மக் கொலை

தென்னிலங்கையில் வயோதிபத் தம்பதி மர்மக் கொலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US