நீதிமன்றில் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
வெள்ளவத்தை மரைன் டிரைவ் பகுதியில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கில், பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மூன்று குற்றச்சாட்டுகளில் ஒன்றைத் தான் செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
வீதி விபத்து ஒன்றைத் தடுக்கத் தவறியமை தொடர்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 181 ஆவது பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்ட முதலாவது குற்றச்சாட்டை ரவி செனவிரத்ன ஏற்றுக்கொள்வதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
எனினும், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த 'அலட்சியமாக வாகனத்தை செலுத்தியமை' மற்றும் 'மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை' ஆகிய ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஏற்க முடியாது ரவி செனவிரத்னவின் சட்டத்தாரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் மீளப்பெறுவதற்குத் தமது தரப்பில் ஆட்சேபனை இல்லை எனப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதவான் காஞ்சனா நிரஞ்சலா சில்வா, முதலாவது குற்றச்சாட்டுக்கான தண்டனைத் தீர்ப்பை அறிவிப்பதற்கும், ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து முடிவெடுப்பதற்கும் வழக்கை வரும் ஜூன் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri