மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை விவகாரம்: மருத்துவ சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
மருத்துவர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிக்கப்படகூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (03.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது எல்லை மட்டும் அதிகரிக்கப்பட்டால், பாரிய அளவில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்க நேரிடும் எனவும் மருத்துவ பணியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு
ஓய்வு பெறும் வயதெல்லை மருத்துவர்களுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தொடர்பில் ஏனைய தரப்புகளின் எதிர்ப்பு குறித்து சுகாதார அமைச்சருக்கு நன்றாகத் தெரியும் என சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் சாட்சியங்கள் கிடையாது.
நாட்டில் 200 வகையான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக மூன்று மாதங்களுக்கு முன்னர் நாம் குறிப்பிட்டு இருந்தோம்.
அப்பொழுது அதனை பொய் எனக் கூறிய சுகாதார அமைச்சர், தற்போது மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
எமக்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் அமைச்சருக்கு ஏன் கிடைக்கவில்லை என்பதனை அமைச்சர் தேடி பார்க்க வேண்டும் என ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
