கடன் செலுத்துவதற்கான கையிருப்பு! சிக்கிக் கொள்ளப் போகும் அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் தேர்தலை இலக்கு கொள்ளாமல் முன்னெடுத்த பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கி செல்கிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(3) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வரி
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அவர் திட்டமிட்ட செலவினங்களும் அவ்வாறே கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் மூலதன செலவினங்களில் சிறு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு நாம் கையிருப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.இவை கட்டாயமாகும்,ஏனென்றால் 2028 ஆம் ஆண்டு ஏப்ரலில் கடனை செலுத்த வேண்டும்.
2028 இல் 14 டொலர் பில்லியன் கையிருப்பு இருக்க வேண்டும்.
ஆனால் இது பாரிய சவாலான காரியமாகும் இந்தியாவுக்கு தலையில் குட்டிவிட்டு நாம் வர்த்தகம் செய்வது அவ்வளவு உசிதமான காரியமல்ல.
இந்தியாவின் வரி அதிகரிப்புக்கு சந்தோசப்படாமல் இந்தியாவுடன் சேர்ந்த பொருளாதாரத்தில் ஈடுபடுவதே சிறந்த செயற்பாடாகும்.
உலகில் இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடாகும். அது மூன்றாவது இடத்துக்கு வந்து விடும்.
உலகமயமாக்கல்
அதனால் இந்தியாவுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடுவது எமக்கு இலகுவான செயற்பாடாகும். அன்று ஹொங்கொங் சீனாவுக்கு அன்று சாதகமாக அமைந்ததால் இன்று முன்னிலையில் இருக்கிறது.நாம் அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
எமக்கு இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் உண்டு.அதை ட்ரம்ப் இன்று இதை கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் ட்ரம்ப் நான்கு வருடம் தான் ஆட்சியில் இருப்பார்.
இது தான் உலகமயமாக்கல்.அதன் சரியான பாதையை நாம் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.
கச்சதீவு எமக்கு உரித்தானது.தேர்தல் வாக்குகளுக்காக கத்தும் சிலரின் கருத்துகளுக்கு நாம் செயற்பட முடியாது. ஜனாதிபதி அநுரவின் கருத்து ஏற்றுக் கொள்ள கூடியதாகும் என குறிப்பிட்டுள்ளார்.



