ஐ.தே.கவை விட்டு வெளியேறியோருக்கு ரவி அழைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறியோர் மீண்டும் தாய் வீடு திரும்ப வேண்டும் என்று கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்க அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று (21.10.2023) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் வரவேற்புயை நிகழ்த்துகையிலேயே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
நாடு தொடர்பில் சிந்தித்து முக்கியமான முடிவுகளை எடுக்கப் போய் தான் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவைச் சந்தித்தது.
ஆனால், ஐ.தே.கவின் முடிவுகள் சரி என்பதை மக்கள் இன்று ஏற்றுள்ளனர். ரணில் விக்ரமசிங்கவால் தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam

டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் த்ரில் வெற்றிகள்: மிகச்சிறிய வித்தியாசத்தில் முடிந்த டாப் 10 போட்டிகள் News Lankasri
