ஹிருனிக்காவின் வீடு தாக்கப்பட்ட நிலையில் ஞானக்காவுக்கு பாதுகாப்பு வழங்கும் ஜனாதிபதி- ரவூப் ஹக்கீம் சாடல்!
ஒடுக்கு முறைக்கு செல்லவேண்டாம் என்று படையினரையும் காவல்துறையினரையும் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜயரத்ன இந்தக் கோரிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.
தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகி அரசியல் கட்சிகளில் யாரையாவது பிரதமராக கொண்டு நிர்வாகம் ஒன்று அமைக்கப்படவேண்டும்.
இந்த நிர்வாகம் மூலமே சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றத்துக்கு வெளியில் நிபுணர்களை கொண்டு பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி குறிப்பிட்ட காலத்துக்கு அரசாங்கத்தை நடத்திச்செல்லவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
இதனையே நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியமாக ஹக்கீம் குறிப்பிட்டார்.
இதனை விடுத்து அரசாங்கம், பொறுப்பை தட்டிக்கழிப்பது சிறந்ததல்ல என்று அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் இன்று காலை எதிர்க்கட்சியினர் போராட்டக் களத்தில் இருந்தபோது, செயற்படும் வீரரான ஜனாதிபதியை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்து தமது பலத்தை காண்பித்திருக்கிறார்கள் என்றும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்படும் வீரருக்கு நாட்டில் ஒரு நிதியமைச்சரை நியமிக்கமுடியவில்லை.
தமது மீரிஹன வீட்டுக்கு பிரச்சினை வந்தபோது அதற்கு முகங்கொடுத்துள்ள ஜனாதிபதி அன்று ஹிருனிக்கா வீட்டை நோக்கி தாக்குதல் நடத்தியபோது அதற்கு பாதுகாப்பை வழங்கவில்லை
இதற்கு பதிலாக அவர் ஞானக்காவின் வீட்டுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளதாக ஹக்கீம் குறிப்பிட்டார்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
