இரத்தினபுரிக்கான அதிவேக நெடுஞ்சாலை பணிகள் இடைநிறுத்தம்
நிதி நெருக்கடி காரணமாக, மேல் மாகாணத்தின் கஹதுடுவவை, சபரகமுவ மாகாணத்தில் உள்ள இரத்தினபுரி வழியாக பெல்மதுல்லையுடன் இணைக்கும் ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முதலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 2010 - 2015 ஆட்சியின் போது முன்மொழியப்பட்டது.
ஆட்சி மாற்றம்
இந்த அதிவேக நெடுஞ்சாலையை, முதலில் 2018இல் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தாலும், 2015இல் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், பணிகள் விரும்பிய வேகத்தில் முன்னேறவில்லை.
பின்னர், வீதி மேம்பாட்டு ஆணையகம், மாகா இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்திற்கு இதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது. இருப்பினும், நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புதிய அரசாங்கம் இந்த திட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.
நிதி நெருக்கடி காரணமாக இந்தத் திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளமையை, போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இரத்தினபுரி வரை செயற்பாட்டில் இருந்த, காலனித்துவ கால தொடரூந்துப் பாதை புனரமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.