கொழும்பில் பெற்ற தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்
இரத்மலானை பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது மனைவியுடன் இணைந்து தாயை விட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
70 வயதான போர்ப்ஸ் என்ற பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
“என்னிடம் நிறைய பணம் மற்றும் பல கார்கள் இருந்தன. எனது கணவர் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மேலாளராக இருந்தார். அவர் புற்றுநோயால் இறந்துவிட்டார்.
நான் இரத்மலானையில் மகன் வீட்டிலேயே இருந்தேன். எனது மகனும் அவரது மனைவியும் மிகவும் தகாத வார்த்தைகளினால் திட்டி என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள்.
தற்போது தங்குவதற்கு ஒரு இடமில்லை. சுலைமன் ட்ரேடர்ஸில் நண்பியின் வீட்டிற்கு வந்தேன். அவர் பணிப்பெண்ணிடம் கூறி என்னை வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எனக்கு மிகவும் பசிக்கின்றது. எனக்கு இந்த இடத்தில் அமர்வதற்கு இடமளிக்க முடியுமா?” என அவர் வினவியுள்ளார்.
உடனடியாக அங்கிருந்த இளைஞன் அவருக்கு ஒரு போத்தல் நீரை வழங்கிவிட்டு அமர்வதற்கு இடமளித்துள்ளார்.
மிகவும் நேர்த்தியான ஆடைகளை அவர் அணிந்திருந்தார். அவர் மிகவும் சுத்தமான வாழ்ந்திருப்பதனை அவரது ஆடையிலேயே பார்க்க முடிந்தது. அவரது மிகவம் சரளமாக ஆங்கிலம் பேசினார் என இந்த சம்பவத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
நீரை பருகிவிட்டு தற்போது எனக்கு செல்ல ஒரு இடமில்லையே என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவ்விடத்தில் இருந்த பேஸ்புக் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை அவரை தனது வீட்டில் இடம் வழங்குவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




