ஓடித்தப்பிய ரதன தேரர்! பொலிசார் வலைவீச்சு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரரை கைதுசெய்வதற்காக பொலிசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அவர் தலைமறைவாகித் தப்பித்துக் கொண்டுள்ளார்.
அபே ஜனபல கட்சியின் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் என்பவரைக் கடத்திச் சென்று அச்சுறுத்தி அவரது கட்சிக்கு உரித்தான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை பலவந்தமாகப்பெற்றுக் கொண்டதாக ரத்ன தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தலைமறைவான தேரர்
இது தொடர்பில் கடந்த 2020ம் ஆண்டு வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் அளித்த முறைப்பாட்டின் பேரில் கடந்த ஜுலை மாதம் தொடக்கம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் ரத்ன தேரரின் தொடர்பு குறித்து நம்பகமான சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் நேற்றைய தினம் அவரைக் கைது செய்வதற்காக ராஜகிரியவில் உள்ள அவரது விகாரைக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிசார் சென்றுள்ளனர்.
எனினும் அவர் தப்பித்து தலைமறைவாகி இருப்பதுடன் கைபேசியையும் அணைத்து வைத்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.



