மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் ரதன தேரர்:குற்றம் சுமத்தும் தேரர்
முழு நாடும் சரியான பாதையை நோக்கி என்ற தலைப்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் தலைவர் இணைந்து நேற்று நடத்திய மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உரையாற்றும் போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரதன தேரர் அங்கம் வகிக்கும் எமது மக்கள் சக்தியின் முன்னாள் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர், ரதன தேரரின் உரைக்கு தடையேற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதே இதற்கு காரணம்.
அத்துரலியே ரதன தேரர், கடந்த 13 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போதிலும் செய்த காரியங்கள் எதுவுமில்லை எனவும் மீண்டும் ஒரு முறை மக்களை ஏமாற்றுவதற்காக வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் விமலதிஸ்ஸ தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாக்க மேலும் சிலரை ஏமாற்றி வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து மாநாட்டை ஒழுங்கு செய்திருந்தவர்கள், பலவந்தமாக விமலதிஸ்ஸ தேரரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 1 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri