மியன்மாரில் இடம்பெற்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை பெண்ணின் குற்றச்சாட்டு
மியன்மாரில், நவம்பர் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெற்ற அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ரசங்கி சாமிகா விதானவசம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி இலங்கையில் சர்வதேச நிகழ்வை ஏற்பாடு செய்யும் பணியை மேற்கொண்ட நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மலித் ரணசிங்க என்ற நபர், தன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிப்படுத்தப்பட்ட ஒலிப்பதிவு
இலங்கையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்துமாறு மலித் ரணசிங்க அவரை வற்புறுத்த முயற்சிக்கும் ஒலிப்பதிவும் நேற்று ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.
உடன்படிக்கையின்படி, போட்டிக்கு சாமிகா அழகைப் பராமரிக்கும் பொறுப்பு மலித் ரணசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அழகுப் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான செலவுகளை குறித்த நிறுவனமே ஏற்றிருந்தது.
எனினும் ரசங்கி சாமிகா விதானவசம், மியான்மருக்கு சென்ற பின்னர், அவர் போட்டியில் பங்கேற்பதற்கான கட்டணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை என தெரியவருகிறது.
இந்தக் கட்டணம் செலுத்தாமல் போட்டியில் பங்கேற்க முடியாது என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மலித் ரணசிங்க மீது குற்றச்சாட்டு
இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள தனது கணவரிடம் பணத்தை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அவர் பணம் செலுத்தும்போது தாமதம் காரணமாக, அவரால் போட்டியில் இலங்கையை
பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மலித் ரணசிங்க, இதுவரை கருத்துக்கள்
எதனையும் வெளியிடவில்லை.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam
