சிஐடி விசாரணையில் சிக்குவார்களா சாணக்கியனின் நெருங்கிய சகாக்கள்..!
மட்டக்களப்பு - பட்டிருப்பு தொகுதியின் எருவில் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் பாரிய மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியனின் சகாக்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த நிதி மோசடி சம்பவம் தொடர்பில் சாணக்கியன் தனது சகாக்களுக்கு தொடர்பு இல்லை என்றால் தனது பகிரங்க கருத்துக்களை முன்வைக்குமாறு சமூக செயற்பாட்டாளர் கி.வதனகுமார் சவால் விடுத்துள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய மோசடி சம்பவம் குறித்து சமூக செயற்பாட்டாளர் கி.வதனகுமார் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களுடன் வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மலைபோல் குவிந்துள்ள சொத்தில் 1 சதவீதம் மட்டுமே பிள்ளைகளுக்கு... பில்கேட்ஸ் கூறும் காரணம் News Lankasri
