சர்வதேச பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்த கட்டார் மீதான தாக்குதல்!
கட்டாரின் Ras Laffan Industrial City பகுதியில் நடந்த ஏவுகணை தாக்குதலால் திரவ இயற்கை எரிவாயு (LNG) மற்றும் Gas-to-Liquids (GTL) வசதிகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கட்டாரின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான QatarEnergy, இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, கட்டாரின் LNG ஏற்றுமதி திறன் 17வீதம் வரை குறைந்துள்ளதுடன், ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
12.8 மில்லியன்
அந்நாட்டு எரிசக்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மற்றும் QatarEnergy நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Saad Sherida Al-Kaabi தெரிவித்ததாவது, ExxonMobil உடன் இணைந்து செயல்படும் LNG Train 4 மற்றும் 6 ஆகிய உற்பத்தி அலகுகள் சேதமடைந்ததால் ஆண்டுக்கு 12.8 மில்லியன் தொன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சில ஒப்பந்தங்களில் நீண்டகால “force majeure” அறிவிக்க QatarEnergy கட்டாயமாகியுள்ளது.
இதனால் சீனா, தென் கொரியா, இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கும், ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகளுக்கும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட உள்ளது.
மேலும், Shell இயக்கும் Pearl GTL நிலையமும் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் இரண்டு உற்பத்தி அலகுகளில் ஒன்று குறைந்தது ஒரு ஆண்டுக்கு செயலிழந்துள்ளது.