தென்னிலங்கை வைத்தியசாலையில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை
காலி கராப்பிட்டிய வைத்திசாலையில் பெண் ஒருவருக்கு அபூர்வ சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரத்கம, மொரொய்துடுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணின் இடது கை தோள்பட்டை வழியாக ஊடுருவிய மீன் பிடிக்க பயன்படுத்தும் ஐந்து அடி இரும்பு கொக்கி வெற்றிகரமாக அகற்றப்பட்டுடுள்ளது.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின் துறைசார் நிபுணர்களான ரசிக பத்திரன மற்றும் பாலித படடுவ ஆகியோரால் அகற்றப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டவர் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. இந்த பெண்ணின் கணவர் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் இரும்பு கொக்கியால் பெண்ணை குத்தியுள்ளார்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் குத்திய கொக்கியுடன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது மயக்க நிலையில் வைத்தியர்கள் இருவரால் ஒன்றரை மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் 5 அடி நீளமான இரும்பு கொக்கி அகற்றப்பட்டு பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.
தற்போது அந்த பெண் மிகவும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவர் இந்த செயலை செய்துள்ளார்.
எனினும் அதிஷ்டவசமாக அந் பெண்ணின் கை நரம்பு அல்லது எலும்பிற்கு சேதம் ஏற்படாத வகையில் 5 அடி கொக்கி இறங்கியுள்ளது.
இதனால் உயிருக்கு ஆபத்தின்றி அந்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam