விபரீதத்தில் சிக்கிய பாகிஸ்தான் எல்லையை தாண்டிய இந்திய “மான்”
பதற்றம் நிறைந்த எல்லையின் ஊடாக பாகிஸ்தானுக்குள் பிரவேசித்த இந்திய “மான்” ஒன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அரிய வகையான சாம்பல் நிற மான் ஒன்றே உயிரிழந்தது. காட்டு நாய்களின் தாக்குதல் காரணமாகவே இந்த மான் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா மற்றும் ஆசிய காடுகளில் அரிய வகை சாம்பல் நிற மான்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வகை மான்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே வாழ்வதால், அவற்றை சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு, அழிந்து வரும் உயிரிழங்களில் சிவப்பு பட்டியலில் வைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காடுகள் வழியாக பாகிஸ்தான் நாட்டிற்குள் அரியவகை சாம்பல் நிற மான் ஒன்று சென்றுள்ளது.
அங்கு வனப்பகுதியில் இருந்த காட்டுநாய்கள் இந்த மானை தாக்கியுள்ளன.
இதன்போது படுகாயமடைந்த “மான்“ பாகிஸ்தானின் கசூர் நகரம் ஹவாலி படியானாவாலி கிராமம் அருகே சுற்றித்திரிந்தபோது, கிராம மக்கள் சிலர் அந்த மானை பிடித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
எனினும் தவறுதலான சிகிச்சைக் காரணமாக மான் உயிாிழந்தது.


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
