லண்டனில் கண்டுப்பிடிக்கப்பட்ட அரியவகை விண்கல்!
லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை விண்கல் மூலம் சூரியமண்டலத்தின் ரகசியத்தை அறிவதற்கு தொடக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த மாதம் 28ம் திகதி பிரித்தானியாவின் விண்கோம்ப் நகரின் வடகிழக்கில் அரியவகை விண்கல் ஒன்று விழுந்துள்ளது. இதனை விஞ்ஞானிகள் சர்வதேச விண்கல் கண்காணிப்பு கெமரா மூலம் அவதானித்தனர்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட நீண்ட தேடலுக்கு பின்னர் அந்த விண்கல் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்து பார்த்ததில் carbonaceous condrite என்னும் அரிய வகையை சார்ந்தது என்பதும் தெரியவந்தது.
இது குறித்து மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் விண்கல் நிபுணரான Katherine Joy கருத்து வெளியிடுகையில், carbonaceous condrite விண்கலானது பெரும் வெடிப்பினால் உருவாகியது. பூமியில் இதுவரை 65 ஆயிரம் விண்கற்கள் கண்டெடுக்கப்பட்டது.
அவற்றுள் 51 மட்டுமே carbonaceous condrite என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த விண்கல் மூலம் பூமி மற்றும் பிற கோள்களுக்கும் நீர் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றிய விளக்கத்தை அறியலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விண்கல் இதுவரை பூமி ஆராய்ச்சி செய்யாத விண்கல் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.