இராணுவத் தளபதி மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு இடையே அரிய சந்திப்பு
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில்அரிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 563வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பண்டுக பெரேராவின் இறுதிச் சடங்கு இடம்பெற்றிருந்த நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஜெனரல் சவேந்திர சில்வா மரியாதை செலுத்தியதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, முல்லேரியாவில் உள்ள தொற்று நோய் வைத்தியசாலையில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரிகேடியர் பண்டுக பெரேரா கடந்த வெள்ளிக்கிழமை (31) காலமானார்.
அவரது இறுதிக்கிரியைகள் நேற்று முன்திகம் எல்தெனிய மயானத்தில் இராணுவ மரியாதை மற்றும் அவரது நெருங்கிய இராணுவ சகாக்கள், குடும்ப உறுப்பினர்களின் ஒன்றுகூடலுக்கு மத்தியில் இடம்பெற்றது.
