இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் முதல் பத்து நாட்களுக்குள் சுமார் 30,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கடந்த பத்து நாட்களுக்குள் இலங்கைக்கு மொத்தமாக 31,343 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இதில் ஒரு நாளைக்குச் சராசரியாக 3,134 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரையில் ரஷ்யாவிலிருந்து 4,566 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,799 பயணிகளும், இந்தியாவிலிருந்து 3575 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
அத்துடன் ஜெர்மனி, பிரான்ஸ், உக்ரையின், போலாந்து மற்றும் கஸகஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan