“ரஞ்சித் கிண்ண கிரிக்கட்” முதல் போட்டியிலேயே முச்சதம் பெற்ற சாதனையாளர்! (வீடியோ)
இந்தியாவின் முதல்தர கிரிக்கட் போட்டியான ரஞ்சி கிண்ண ஆட்டம் ஒன்றில் பீகார் அணியின் வீரர் ஒருவர் மூன்று சதங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
பீகார் மற்றும் மிசோராம் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவில் மோதி வருகிறது.
இதில் நாணயச் சுழற்சியில் வென்ற பீகார் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது.
இந்த போட்டியில் பீகார் அணிக்காக விளையாடிய சகிபுல் கனி என்ற வீரரே முச்சதங்களை பெற்றார்.
405 பந்துகளில் 56 நான்கு ஓட்டங்கள் மற்றும், 2 ஆறு ஓட்டங்களை பெற்று அவர் 341 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்தநிலையில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்
ரஞ்சித் கிண்ண கிரிக்கட் போட்டிகள் 1934 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்று வருகின்றன.
இதில் 2020 ஆம் ஆண்டு வரையில் 46 முச்சதங்கள் 41 வெவ்வேறு துடுப்பாட்ட வீரர்களால் பெறப்பட்டுள்ளன.
1948-49ஆம் ஆண்டில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் பி.பி. நம்பிகல்கர் என்ற வீரர் ஆகக்கூடுதலாக 443 ஓட்டங்களை பெற்றார்.
அதேநேரம் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ரஞ்சித் போட்டிகளில் மூன்று முச்சதங்களை பெற்ற வீரராக திகழ்கிறார்.