அரசியலில் இருந்து விலகி அவுஸ்திரேலியா செல்ல தயாராகும் ரஞ்சன்?
கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படாதது குறித்து கவலையில் இருப்பதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இம்முறை சுதந்திர தினத்தில் தான் விடுதலை செய்யப்படாதது தொடர்பில் அவர் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தனது வாய் குறித்து வெட்கப்படுவதாகவும் கூறிய கருத்துக்களுக்காக கவலையை வெளியிட்டு, மன்னிப்பு கோர தயாராக இருப்பதாகவும் அண்மையில் தன்னை பார்க்க சென்றிருந்தவர்களிடம் ரஞ்சன் கூறியுள்ளார்.
இதனிடையே ரஞ்சன் ராமநாயக்க சிறையில் இருந்து விடுதலையானால், மீண்டும் அரசியலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக பேசப்படுகிறது. அவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நீண்டகாலம் தங்கி இருக்க தயாராகி இருப்பதாகவும் தெரியவருகிறது.
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக இவ்வாறான செய்தி வெளியாகியுள்ள நிலையில், அவர் தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan