மிருகத்தை போன்று நடத்தப்படும் ரஞ்சன் ராமநாயக்க - வெளியான காணொளியால் சர்ச்சை
சிறையில் அடைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கொழும்பில் உள்ள இலங்கை பத்திரிகையாளர் மன்றத்தின் முன் அழைத்து வரப்பட்டார்.
அங்கிருந்து ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அழைத்து செல்லும் போது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது அவரை பேருந்திற்குள் இழுத்து சென்று ஏற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தான் கொலை செய்யவில்லை, நீதிக்காகவே போராடினேன் என்னை இப்படி நடத்த வேண்டாம் என அவர் கூச்சலிட்டுள்ளார். எனினும் அதனை கண்டுக்கொள்ளாத பொலிஸ் அதிகாரிகள் அவரை பலவந்தமாக இழுத்து சென்று பேருந்தில் ஏற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது எடுக்கப்பட்ட காணொளியை ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோபூர்வ யூரியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
